வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எந்த பூக்களை தெய்வ வழிபாட்டிற்கு பயன்படுத்தவேண்டும்...?

விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். பூக்களில் செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 


முருகனுக்கு மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா ஆகிய பூக்களுடன் சூரியகாந்தி பூவும் பயன்படுத்தலாம். 
 
துர்க்கைக்கு மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும். 
 
அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் தும்பை, வில்வம், செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம் என்பவற்றால் அர்ச்சனை  செய்யப்படும். 
 
விஷ்ணுவிற்கு தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, ஆகிய பூக்களால் அர்சனை செய்யப்படும். பூக்களால் அர்சனை செய்வதால் நமக்கு எண்ணிட முடியா பலன்கள்  கிடைக்கும் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. தாமரை மலர்கள் தெய்வீகத் தன்மையை தரவல்லது.
 
அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த பூவாக செம்பருத்தி தனித்துவமான சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. செம்பருத்தி பூவை எந்த தெய்வத்திற்கு வேண்டுமானாலும் நீங்கள் படைத்து வழிபடலாம். 
 
ஒரே ஒரு செம்பருத்தி பூவை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் நிறைய நன்மைகள், நல்ல ஆற்றல்கள் பெருகும். செம்பருத்தி செடி ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் நிறைய பயன்களை கொண்டுள்ளது.