செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வீட்டில் ஆகாச கருடனை வைப்பதால் என்ன பலன்...?

ஆகாச கருடன் என்ற இந்த கிழங்கை கயிற்றில் கட்டி தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். மேலும் காற்றில் உள்ள ஈரத்தை ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது. முளைவிட்டு கொடியாக படர்ந்து விடும்.
மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பன மிகச் சிறப்பு வாய்ந்தன. இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவுவன. இதற்கு சாகா மூலி என்ற  பெயரும் உண்டு. இந்த கிழங்கில் சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம் போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.  இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.
ஆகாச கருடன் வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த  இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும்.அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.
 
பயன்கள்: இதற்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடுதல் வேண்டும்.
 
கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும். பாம்பு விஷங்கள், தேள், பூரான் போன்ற விஷங்கள்  எளிதில் முறியும். பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை அளவு சாப்பிட்டால் வாந்தியும், மலம் கழியும். உடனே விஷமும்  முறிந்துவிடும்.