புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மகாபலி புகழை நிலைக்க செய்த விஷ்ணு பகவான்!!

மலையாள தேசத்தில் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. 
மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் விஷ்ணுவிடம் கூறினார்.
 
நல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீது தேவர்கள் குறை கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த வையம் நிலைத்திருக்கும்  வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார்.  தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார்.
 
விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார். மகாபலியிடம் வந்து சேர்ந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார். மகாபலியும் தாரை வர்த்து கொடுத்தேன் என்று சொன்னான். உடனே வாமனனாக வந்த பகவான். ஓங்கி உயர்ந்து ஓர் அடியால் பூமியையும் மற்றிமோர்  அடியால் விண்ணையும் அளந்து முடித்து மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார்.
 
வந்தது கடவுள் என்பதை அறிந்து மகாபலி தன்னுடைய தலையில் பகவானின் மூன்றாவது அடியை வைத்துக்கொள்ளுமாறு சொன்னான்,  பகவானின் திருவடியை தாங்கும் பெரும்பேறு அவனுக்கு வாய்த்தது. எம்பெருமான மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பினார். அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். “வருடம் ஒரு முறை இதே நாளான  திருவோணத்தில் நான் இந்த பூமிக்கு வந்து எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்வதை பார்த்து செல்ல வேண்டும் என்னும் வரத்தை  கோரினான். ஆதலால்தான் ஆண்டு தோறும் மக்களை காண வரும் இந்த “ஓணம்” நாளை திருவோணம் என்று போற்றி விழாவாக  கொண்டாடுகின்றனர்.