1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:15 IST)

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளும் அவற்றின் சிறப்புக்களும் !!

Lord Murugan
புலவர் நக்கீரர் தமிழ்நாட்டில் உள்ள 6 பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களை தேர்வு செய்து அதனை அறுபடை வீடு என்று அழைத்தார். இந்த 6 முக்கியமான கோவில்களும் சில முக்கியமான சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.


1. திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.

2. திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.

3. பழநி - மாங்கனிக்காக தமையன் விநாய கரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.

4. சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே  பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.

5. திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

6. பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.