திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எண்ணெய் தேய்த்து குளிக்க ஏற்ற தினங்கள் மற்றும் பலன்கள் !!

பொதுவாக நமது இல்லங்களில் நாம் இருக்கும் சமயத்தில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நமது பெற்றோர்கள் நமக்கு எண்ணெய்யை தேய்த்து பின்னர் குடிக்கச் சொல்வார்கள்.
 

எண்ணெய்யை தேய்த்து குளித்தவுடன் உடலில் இருக்கும் அழுக்குகள் மற்றும் வெப்பங்கள் வெகுவாக குறைவதால் நமது உடலுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. இதன் மூலமாக பிற நாட்களில் நமது உடல் தனது பணியை சிறப்பாக மேற்கொள்ள உதவுகிறது. அந்த வகையில், எந்தெந்த தினத்தன்று  எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்ன நன்மையை தரும் என்பதை பற்றி நாம் இனி காண்போம்.
 
ஆண்களுக்கு:
 
ஞாயிற்றுக் கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கும் பட்சத்தில் இருதயத்தில் தாபம் வரும். திங்கட்கிழமை மேற்கொள்ளப்படும் எண்ணெய் குளியலின் மூலமாக நமது மேனியானது பொலிவு பெறும்.
 
செவ்வாய்க்கிழமை எண்ணெய்யை தேய்த்து குளித்துவந்தால் அருள் கிடைக்கும். புதன் கிழமை எண்ணெய்யை தேய்த்து குளித்து வந்தால் செல்வ நிலை  அதிகமாகும்.
 
வியாழக் கிழமை எண்ணெய்யை தேய்த்து குளித்துவந்தால் தரித்திரம் தாண்டவமாடும். வெள்ளிக் கிழமை எண்ணெய்யை தேய்த்து குளித்து வந்தால் ஆபத்தை தரும். சனிக் கிழமை எண்ணெய்யை தேய்த்து குளித்துவந்தால் தீர்க்காயுள் தரும்.
 
பெண்களுக்கு:
 
செவ்வாய்க் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்துவந்தால் பாக்கிய விருத்தி பெறும்., வெள்ளிக் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் சௌபாக்கியமாக  வாழ்வார்.