1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜனவரி 2025 (08:35 IST)

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – கடகம் | Pongal Special Astrology Prediction 2025

Kadagam
பிறக்கும் புத்தாண்டு தமிழர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கலுடன் மகிழ்ச்சி கரமாக தொடங்குகிறது. தனசேர்க்கையின் மாதமான தை மாதத்தில் ராசிகளுக்கான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

ராசியில்  செவ்வாய்(வ), சந்திரன் -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் கேது -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் புதன் -  களத்திர  ஸ்தானத்தில் சூர்யன் -  அஷ்டம  ஸ்தானத்தில் சுக்ரன், சனி -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  - லாப  ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

14.01.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
18.01.2025 அன்று  செவ்வாய்  அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
13.11.2024 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
19.01.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  புதன்  களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
28.01.2025 அன்று  களத்திர ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
05.02.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
கடக ராசியினரே இந்த மாதம் வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சு திறமை அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது.  மனதில் உற்சாகம் உண்டாகும்.

புனர்பூசம்:
இந்த மாதம் உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

பூசம்:
இந்த மாதம் அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக சுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.  நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

ஆயில்யம்:
இந்த மாதம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: திங்கள்கிழமையில் ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். மன அமைதியை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சந்திரன், சுக்கிரன்;
சந்திராஷ்டம தினங்கள்: ஜன: 31; பிப்: 27, 1
அதிர்ஷ்ட தினங்கள்:  பிப்: 8, 9, 10