ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கண் திருஷ்டி தோஷத்தை போக்கும் பரிகாரம் பற்றி பார்ப்போம்....!!

பொதுவாக கண் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு  என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். இதிலிருந்து எளிதில் விடுபட சில பரிகாரங்களை வீட்டிலே எளிய முறையில் செய்யலாம். 

பெண்களுக்கு உப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதனை இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என்று மூன்று முறை சுற்றி நீரில் போடுதல் நன்மை  தரும். பெண்கள் மஞ்சள் பூசி குளித்தால் எதிர்மறையான கதிர் வீச்சுகள் நீங்கி விடும்.கண்ணிற்கு மை இடுதல் கண் திருஷ்டியை அழிக்கச் செய்யும்.
 
குழந்தைகளுக்கு விளக்கேற்றி திரியை எரியச் செய்து அதனை குழந்தைகளுக்கு சுற்றி பின்பு மஞ்சள் கலந்த நீரில் போடும் போது அதில் சத்தம் வருதல்  நல்லது.அதன் புகை குழந்தைகளுக்கு படும்படி செய்து அந்த குவளையை மூன்று முறை சுற்றி அதில் உள்ள மஞ்சள் நீரை செடியிலோ அல்லது வெளியிலோ  ஓரமாக ஊற்றி விடுதல் நல்லது.
 
குழந்தைகளுக்கு வசம்பை எரித்து அதன் கரியை கன்னத்தில் பொட்டிடுவது நல்லது. வீட்டில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்:வீட்டின் வாயிலில் படிகாரத்தை  கருப்புக் கயிற்றால் கட்டி தொங்க விடுவது நல்லது. சோற்றுக்கற்றாழையை வாசலில் கட்டி தொங்க விடுவது நல்லது. வீட்டு வாசலில் திருஷ்டி பொம்மை மற்றும்  கண் திருஷ்டி, பிள்ளையார் படம் அல்லது பிள்ளையார் சிலை வைப்பது நல்லது.
 
வீட்டு வாசலில் ரோஜா மற்றும் கற்றாழைச் செடி வளர்ப்பது நல்லது. வீட்டிற்குள் மீன் தொட்டி மற்றும் ஒரு கிண்ணத்தில் நீர் நிரப்பி மலர்களை நிரப்புவது நல்லது.  வீட்டின் எதிரே கண்ணாடியை வைப்பது நல்லது.