வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (12:33 IST)

போகி பண்டிகையின் வழிபாட்டு சிறப்புகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

போகி, பொங்கல் பண்டிகையின் முதல் திருநாளாக வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை இந்த வருடம் ஜனவரி 13, மார்கழி 29ஆம் தேதி வியாழன் கிழமை கொண்டாடப்படுகிறது.


போகி பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு 'நிலைப் பொங்கல்' நிகழ்வு நடத்த வேண்டும். அதாவது வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்து அழகு படுத்தி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை செய்ய வேண்டும்.

இதில் முக்கியமாக கற்பூர ஆரத்தி காட்டி வீட்டில் இருக்கும் தெய்வங்களை வணங்குவர். இதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் துர் சக்திகள் விலகி லெட்சுமிகாட்சம் பெருகும்.

இந்த பூஜையை வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிதான் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். மேலும் நிவேதனமாக வடை, பாயசம், சிறுதானியங்கள், போளி, மொச்சை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைக்க வேண்டும்.

இந்திர வழிபாடு என்பது போகி பண்டிகையின் போது, வீட்டுக்குள் தெய்வீக உணர்வுகளை, குணங்களையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவதற்காகவும் தான் வீட்டின் கூரையில் கண்ணுப்பீழையை கட்டி வைக்கின்றனர்.

போகி தினத்தில் தேவர்களின் தலைவனான இந்திரன் முதலான தேவர்களை பூஜித்து அவர்களை திருப்தி செய்ய வேண்டும்.