வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (12:06 IST)

மாசி மாதத்தில் என்னவெல்லாம் சிறப்புகள் உள்ளது தெரியுமா...?

மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான். மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.


மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.

மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான். மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.