ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பணவரவை அதிகரிக்க உதவும் மந்திரங்கள் பற்றி தெரியுமா...?

தொழில், வியாபார ஸ்தாபனங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று விளக்கேற்றி பச்சைக்கற்பூரம், ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால், வெற்றிலை பாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் வைத்து இந்த மந்திரத்தை செய்யவேண்டும்.

"ஓம் ஸ்ரீம் மஹா லக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற  வளமான வாழ்வு தந்தருள வேண்டும்" - என்று வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
 
மந்திரம் - "ஸ்ரீசுக்ல மகா சுக்லே நவாங்கே ஸ்ரீமஹாலக்ஷ்மி நமோ நமஹ". கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர தொழில் சிறப்பாக நடைபெறும்.
 
காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும் அல்லது மாலை 6:15 முதல்  6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை, தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
 
மந்திரம் - ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி |ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா ||
 
பணம் எண்ணும்போதும், புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது.  குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே கூடாது. இது தரித்திரத்தை உண்டாக்கும்.