வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சனீஸ்வரனின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க பைரவர் வழிபாடு !!

வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம். அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம போன்ற சனியின் பாதிப்பால் தடுமாறும் ராசியினர் தெளிவடைவார்கள். 


சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு பைரவரே ஆவார் சனியின் வாதநோயை நீக்கியவரும் பைரவரே.

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். 
 
தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் பெற்றுக் கொண்டார்.
 
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரண டைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பிரமாணம் பெற்றுக் கொண்டார்
 
வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும் வீட்டில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.