புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் உண்டாகும் பலன்கள் !!

ப்ரபோதினி ஏகாதசி விரதத்தினை ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் அனுஷ்டிப்பதால் இரண்டு ஜென்மாவின் பாபங்கள் நீங்குகிறது.


நாள் முழுவதும் உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டிப்பதால் ஏழு ஜென்மங்களின் அனைத்து பாபங்களும் நீங்கப்பெறுகிறது.
 
மூவுலங்கங்களிலும் கிடைக்கப்பெறாத பொருளும், ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கப்பெறும். ப்ரபோதினி ஏகாதசி விரதத்தின் பலனால் பாபங்களில் மிகவும் பெரிய பாபமும் தீருகிறது.
 
எவர் ஒருவர் சிரத்தையுடன் இத்தினத்தில் சிறிதளவேனும் புண்ணியம் செய்தால், அது மலையளவிற்கு ஈடாகிறது. ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதாக சங்கல்பத்தை தன்னுடைய மனதில் நினைத்தாலே நூறு ஜென்ம பாபங்கள் அழிந்து விடுகின்றன.
 
ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதத்தை அனுஷ்டிப்பவரின் பத்து தலைமுறை மூதாதையர் மற்றும் எதிர்கால சந்ததியினர் விஷ்ணுலோகம் அடைந்து வாசம் செய்யும் பாக்கியத்தை பெறுகின்றனர். நரகத்தில் அனேக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவருடைய பித்ருக்களும் விடுதலை அடைந்து விஷ்ணுலோகம் அடைந்து சுக வாழ்வு பெறுவர்.