புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (10:36 IST)

சனிக்கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் !!

சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்ள வேண்டும். காலையில் சிறிது உணவை காகங்கள் உண்ண வைக்க வேண்டும்.


மாலை அருகில் உள்ள பெருமாள் ஆலயம் சென்று துளசி மாலை சாற்றி வழிபாடு செய்யலாம். மாலையில் பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் உங்களால் இயன்ற தானங்களை அளிப்பது மிகுந்த நன்மையை தரும்.

நவகிரகங்களில் சனி பகவான் ஆனவர் மனிதர்களுக்கு நீண்ட நாள் வாழும் ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை பெறுகிறார்.

தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானத்தையும், தொழில் விருத்தியும் உண்டாகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடிக்க ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருகி நாம் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.