கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்!

Written By Sasikala
Updated: செவ்வாய், 23 மே 2017 (12:25 IST)
 
* மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. பணக்காரரோ, ஏழையோ யாராக இருந்தாலும் போதும் என்ற மனதை  இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும்.
 
* முதுமைக்கு தேவையானதை இளமையிலும், மறுபிறவிக்கு தேவையானதை இப்பிறவியிலும் தேட வேண்டும்.
 
* கண்ணிக்குத் தெரிந்த உயிர்களுக்கு தொண்டு செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் தொண்டு செய்ய வேண்டும்.
 
* கல்வி, தானம், உடல்நலம் மூன்றிலும் தேர்ச்சி பெற இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் அவசியம்.
 
* நல்லவர்களின் உபதேசத்தை காது கொடுத்து கேட்க வேண்டும். சாதுக்களின் நல்ல வார்த்தைகள் காது வழியாக உண்ணும்  உணவு போன்றது.
 
* இறைவன் நமக்கு செய்யும் அத்தனை செயலும் அருள் தான். சில நேரத்தில் சோதனை குறிக்கிடும் போது, துன்பம் போல  தோன்றலாம். ஆனால், அதுவும் கூட அறியாமை தான்.
 
* பலர் சேர்ந்து முறையுடும் போது அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பது போல, பலர் இணைந்து நடத்தும் கூட்டு  பிரார்த்தனைக்கும் உடனடியாக பலன் கிடைக்கும்.
 
* மனிதனுக்கு பெருமை சேர்ப்பது பட்டமோ, பதவியோ, பணமோ. அழகோ, குலமோ அல்ல. அறிவு ஒன்றே ஒருவருடைய  உயர்வுக்கு வழிவகுக்கும்.
அடுத்த கட்டுரையில்
Show comments