திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

வள்ளலாரின் சிந்தனை துளிகளில் சில......!

உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக ஏழைக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சியளிக்கும்.

விரதத்திற்காக பட்டினி கிடப்பதை விட, உயிர்களை கொல்லாது இருப்பது மேலானது.
 
கடவுள் அருட்பெருஞ்ஜோதியாக இருக்கிறார். அவரை விட கருணை மிக்கவர் யாருமில்லை.
 
அன்பையும், இரக்கத்தையும் வாழ்க்கையின் அடிப்படையாகக் கருதவேண்டும், சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் ஆகியவற்றை அறவே நீக்க  வேண்டும்.
 
பெரியவர்களைக் கண்டால், பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். தவறு செய்தால், அதைத் திருத்திக்கொள்ள முயலுங்கள். நற்குணங்களைப் பின்பற்றி  நல்லவர்களாக வாழுங்கள்.
கடவுளின் பெயரால் உயிப்பலி செய்வது கூடாது. ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
 
ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
 
பிறர் குற்றங்களை கவனிக்காமல் இருந்தாலே மனதிலுள்ள தீய எண்ணம் மறையும்.