திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

ஜக்கி வாசுதேவ் மனிதமனம் குறித்து கூறுவது

ஜக்கி வாசுதேவ் மனிதமனம் குறித்து கூறுவது

மனிதமனம் பெரும்பாலும் போராட்டத்திலேயே இருக்கிறது. பலரும் சின்னச் சின்ன விஷயங்களுக்காகக் கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


 


மனதில் துயரம் இருக்கிற வரைக்கும் இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
 
* வாழ்க்கையை இயல்பாக அதன் எல்லாத் தன்மைகளையும் ஏற்றுக் கொண்டால் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விடும். ஆனந்தம் மட்டுமே அப்போது நிலைத்திருக்கும். உள்ளத்தில் ஆனந்தம் நிலைத்திருக்குமானால் புறவுலக வாழ்வின் இன்பதுன்பங்கள் நம்மை சிறிதும் பாதிப்பதில்லை.
 
* நாம் சில விஷயங்களை வேண்டும், வேண்டாம் என்று சொல்லும் போதே நம் மனதில் சில எதிர்பார்ப்புகள் தொடங்கி விடுகின்றன. எதிர்பார்ப்பு உண்டாகும்போது வாழ்வில் விருப்பு, வெறுப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
 
* மனிதர்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பது என்பது என்றோ எப்போதோ நிகழும் அனுபவம் என்று எண்ணுகிறார்கள். அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி இருக்கிறது. அன்பும், ஆனந்தமும் நிலையான உணர்வாக நம்மிடத்தில் இருக்க வேண்டியவையாகும்.
 
* ஒரு மனிதர் தான் எண்ணுவது சரி என்று உணர்ந்து, மிக அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர். அவர் வீண்விவாதங்கள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றில் சிறிதும் ஈடுபடமாட்டார்.