ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (20:34 IST)

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் எவ்வளவு பெரிய பிரச்னைகள், சிக்கல்கள், சூழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.


 


நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். உறவினர், நண்பர்கள் முக்கியத்துவம் தருவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். ஆனால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். 
 
எதிர்த்துப் பேசுவார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. வாழ்க்கை மீது ஒருவித வெறுப்புணர்வும், எதிலும் நம்பிக்கையின்மையும் வந்துச் செல்லும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. 
 
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மறுக்கபட்ட உரிமைகள் கிடைக்கும். உயரதிகாரிகள் ஆதரித்தாலும் சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும். 
 
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் மாதமிது.             
 
அதிஷ்ட தேதிகள்: 2, 6, 7, 16, 25
அதிஷ்ட எண்கள்: 1, 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஊதா 
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி