புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (17:25 IST)

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எந்த ஒரு காரியத்திலும் நிதான போக்கைக் கடைபிடித்து வெற்றி பெறும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். கடினமாக இருக்கும் என்று நினைக்கும் காரியம் சுலபமாக முடிந்துவிடும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த இழுபறி அகலும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கல்வி தொடர்பான செலவுகள் ஏற்படலாம். வாகனங்களை கையாளும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் உங்கள் நண்பர்களிடம் இருந்து கிடைக்கும். அரசியல்துறையினருக்கு பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான நிலை நிலவும். ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வியாழக்கிழமை அன்று வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.