1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By vm
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (07:29 IST)

அய்யோ! மாம்பழமா? ஆப்பிளா? திண்டுக்கல் சீனிவாசனே கன்பியூஸ் ஆயிட்டாரு

திண்டுக்கல் தொகுதியில் நிற்கும் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்ட அமைச்சர் சீனிவாசன் மாம்பழம் சின்னத்துக்கு பதில் ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு கேட்டார்.
திண்டுக்கல் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்துவை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வாக்கு சேகரித்தார். அப்போது அவர் மாம்பழம் சின்னத்துக்கு பதில், ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்டார். 
 
இதனால் தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
 
ஆப்பிளா மாம்பழமா? பாவம் அவரே கன்ப்பியூஸ் ஆயிட்டாரு.
 
முன்னதாக  கடந்த வாரம் திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, 
பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று உலறியது குறிப்பிடத்தக்கது.