செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 9 நவம்பர் 2016 (18:02 IST)

நானோ ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள்?

புதிதாக வெளியிட உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதிநவீன தொழில்நுட்பமான நானோ ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


 
 
இந்த ஜிபிஎஸ் மூலம், செயற்கைக்கோள் மூலமாகவும், பணம் பதுக்கப்படும் இடத்தை கண்டறியலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
 
இந்த பணத்திற்கு பதிலாக நாளை மறுநாள், முதல் வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. 
 
இந்த ரூபாய் நோட்டுக்களில் தான் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் உள்ளதாம். இது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்க கூடியது. 
 
எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாக சேமிக்கப்படும் பணத்தை கண்டுபிடித்துவிடலாம். பூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூட காட்டி கொடுத்துவிடும் என்று செய்திகள் பெரிதாய் பரவி வருகிறது.