செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By

முகத்தை பளிச்சிட செய்யும் சில அழகுக் குறிப்புகள்....!

கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
தேன் மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசுவதால் சருமத்தில் ஈரபதத்தை அளித்து மென்மையாக்குகிறது.
 
அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசிக்குளித்தால் வேர்க்குரு நீங்கி உடல் பளபளப்பு அடையும்.
 
முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
 
தயிரிலுள்ள டைரோசின் என்கின்ற அமினோ அமிலம் இந்த மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதால் சிவப்பழகு கூடும். முகத்தில் இந்த கலவையை பூசி சிறிது நேரம் மசாஜ் செய்வதால் தங்கியுள்ள அழுக்குள் நீங்கி முகம் பொலிவு பெரும்.
 
எலுமிச்சை சாறுடன் சம அளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் எண்ணெய் வடிதல் போகும்; தோலில் ஏற்படும் கரும்புள்ளி மறையும்.
 
முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.