புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 2 மே 2021 (00:27 IST)

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய் !!

சுண்டைக்காயை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து வந்தால், அவை இரத்த சோகையின் அறிகுறிகளை பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் அவற்றில் காணப்படும் அடர்த்தியான இரும்புச் சத்து இதற்குக் காரணமாக அமைகிறது.
 
சுண்டக்காயை சாப்பிட்டால் உடற்சோர்வு நீங்கும். இதை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமாக சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான்.
Ads by 
 
சுண்டைக்காயானது தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. வாயுப் பிடிப்பு பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு சுண்டைக்காய் நல்ல மருந்து.
 
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்று பிரச்சனையால் அவதிபடுபவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
 
சுண்டைக்காயில் காணப்படும் பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களைத் தடுக்கிறன. சுண்டைக்காய் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் யூரிக் அமிலத்தை அழிக்க உதவுவதால், பல்வேறு சிறுநீரக நோய்களைத் தடுக்கிறது.