1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (00:12 IST)

சிறுநீரக கோளாறுகளைகுணமாக்கும் வெள்ளரிக்காய் !!

வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.
 
 
இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது. வெள்ளரியில் மிகுந்துள்ள  நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும்.
 
வெள்ளரியில் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையும் வெள்ளரியில் உண்டு. 
நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு  இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும்.
 
மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. வெள்ளரிப் பிஞ்சை உட்கொண்டால் புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது.
 
வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
 
நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு  அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும். நுரையீரல் கோளாறுகள், கபம் மற்றும் இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.