செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 8 மே 2024 (19:12 IST)

விநாயகருக்கு ஏற்ற விரதங்கள் என்னென்ன?

Vinayagar Chaturthi
சதுர்த்தி விரதம்: ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், காரியத் தடைகள் நீங்கி, நல்மதிப்பு உண்டாகும்.
 
வெள்ளிக்கிழமை விரதம்: வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி, ஒரு வருடம் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், ஆயுள், ஆரோக்கியம் பெருகும்.
 
செவ்வாய் விரதம்: ஆடி மாத செவ்வாய் தொடங்கி, ஓராண்டு முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், செவ்வாய் தோஷம் நீங்கி, நல்ல வளர்ச்சி ஏற்படும்.
 
சங்கடஹர சதுர்த்தி விரதம்: மாசி மாத தேய்பிறை சதுர்த்தி துவங்கி, ஒரு வருடம் முழுவதும் ஒவ்வொரு மாத தேய்பிறை சதுர்த்தியிலும் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், துன்பங்கள் நீங்கி, நல்வாழ்வு பெருகும்.
 
குமாரசஷ்டி விரதம்: கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், பிள்ளைச் செல்வம், குடும்ப வளம் பெருகும்.
 
தூர்வா கணபதி விரதம்: கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், வம்ச விருத்தி ஏற்படும்.
 
சித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை 14-ம் திதியான சதுர்த்தசி திதியில் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், எதிரிகள் விலகி, வெற்றி பெறலாம்.
 
தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து விரதம் இருப்பது. இதனால், உடல் வலிமை உண்டாகும்.
 
விநாயக நவராத்திரி: ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் விநாயகரை வழிபட்டு விரதம் இருப்பது. இதனால், எல்லா நன்மைகளும் பெறலாம்.
 
வெள்ளிப்பிள்ளையார் விரதம்: ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து, நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குவது. இதனால், எண்ணங்கள் நிறைவேறும்.
 
செவ்வாய் பிள்ளையார் விரதம்: ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. இதனால், பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
 
Edited by Mahendran