1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக துளிகள்

சுவாமி விவேகானந்தர், ஆன்மிகத்துக்குப் புதிய பொருள் தந்த மேதை. கடவுளை அறிதல், மோட்சம் தேடுதல் ஆகியவை எல்லாம் பெரிய ஞானிகளுக்கு மட்டுமே  உரியவை என்பதை மாற்றி, சாதாரண மனிதர்களும் ஆன்மிக தரிசனம் பெற முடியும் என்பதை உரத்துச் சொன்னவர். 
இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள். மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில்  தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.
 
தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும்  வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.