செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (18:18 IST)

சமயபுரம் மாரியம்மன் கோவில் சிறப்புகள் இவ்வளவா?

சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான அம்மன் கோயில் ஆகும். இது தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருவதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
 
இக்கோவிலின் மூலவரான மாரியம்மன் சிலை எட்டு கரங்களுடன், தலையில் சர்ப்பக் கொடியுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து வீற்றிருக்கும் படி இருக்கிறார். இதில் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம். மாயாசூரன் என்பவன் நோய்களின் அதிபதி ஆவார். அம்மன் அவனை வதம் செய்து, நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றினார்.
 
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நோய்கள் குணமாக அக்னிச்சட்டி ஏந்தி வந்து வழிபடுகிறார்கள். இதில் சிலருக்கு சர்ஜரி இல்லாமல் அந்நோய்கள் குணமாகும் அதிசயம் நிகழ்கிறது.
 
தைப்பூசத் திருவிழா, பூச்சொரிதல், ஆடிப்பூரத் திருநாள், நவராத்திரி பெருவிழா உள்ளிட்ட பிற திருவிழாக்களும் இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகின்றன.
 
இக்கோவில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான இக்கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 
Edited by Mahendran