1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (17:28 IST)

சோமவார பிரதோஷத்தின் சிறப்புக்களும் பலன்களும் பற்றி தெரிந்துக்கொள்வோம் !

Sani Pradosham
தீராதவினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன் பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.


நம்பிக்கையோடு ’நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானு க்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும்.

அதிலும், 'சோமவாரம்’ எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானு க்கு உகந்த தினம். அன்றைக்கு வரும் பிரதோஷம் மிக விசே ஷம். சோமவார பிரதோஷத்தில் ஈசனை வணங்கினால், நம்முடைய தோஷங்கள் நீங்கும்; சோதனைகள் எல்லாம் சொல்லா மல் கொள்ளாமல் ஓடிப்போகும்.

பிரதோஷம் தோன்றிய வரலாறு: பிறப்பில்லா பெருவாழ்வுக்கு அசுரர்கள், தேவர்கள் இருவரும் ஆசைப் பட்டார்கள். அதற்குத் தேவை அமிர்தம். அதைப் பெற, மேரு மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தை கயிறாக்கி, பாற்கடலைக் கடைந்தார்கள். அப்படிக் கடைந்தபோது வாசுகி விஷத்தைக் கக்க, பாற்கடலிலும் ஒருவகை விஷம் தோன்றியது. இரண்டும் கலந்து ஆலகால விஷமானது.

அதன் கடுமை தாங்கமுடியாமல் தேவர்கள் கயிலாய மலைக்கு ஓடினார்கள். எம்பெரு மான் ஈசன், தேவர்களை ஆற்றுப்படுத்தி னார். தன் பிரியத்துக்கு உரிய தொண்ட ரான சுந்தரரை அழைத்து, ஆலகாலத்தை திரட்டி எடுத்துவரச் சொன்னார்.

சுந்தரரும் அத்தனை விஷத்தையும் ஒரு நாவற்பழம் போலத் திரட்டி, பாத்திரத்தில் வைத்து எடுத்து வந்தார். ஈசன் அதை வாங் கினார். ஆலகாலத்திலிருந்து  தேவ ர்களைக் காப்பதற்காக, அதை அப்படியே விழுங்கினார்.

விஷம் ஈசனுக்கு ஏதாவது துன்பம் விளைவி த்துவிடுமோ என்கிற அச்சத்தில் அன்னை பார்வதி, ஈசனின் தொண்டை யைப்  பிடித்தார். ஆலகாலம், ஈசனின் உள்ளே இறங்காமல், கண்டத்திலேயே தங்கிவிட்டது. விஷம் உண்ட அயர்ச்சியில் அப்படியே படுத்துவிட்டார் இறைவன்.

பார்வதியும் தேவர்களும் பதைபதைத்துப் போனார்கள். ஈசன் தன் திருவிளையாட லைத்  தொடர்ந்தார். களைப்பு நீங்கி எழுந் தார். டமருகம் ஒலிக்க, சூலாயுதத்தைச் சுழற்றி ஆடத் தொடங்கினார். தேவர்கள் மட்டுமல்லாது, உலகின் அனைத்து ஜீவராசிகளும் காணத் துடிக்கும் அற்புதத் தாண்டவம் அது.

இறைவனின் தாண்டவம் பலவிதம், ஊழிக்காலம் முடியும்போது நடைபெறும் ஊழிக் கூத்து; அந்தி நேரத்தில் ஆடும் ஆட்டம் என எத்தனையோ வகை. ஈசனின் தாண்டவம் என்பது சூட்சுமமானது. அதை நுட்பமாக உணரத்தான் முடியும். சூட்சுமமாக நிகழும் ஆண்டவனின் இந்தக் கூத்தை தரிசித்து பலன்பெறவே பிரதோஷ வழிபாடும் பூஜைகளும்.