ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : சனி, 8 அக்டோபர் 2022 (16:36 IST)

கிரக தோஷத்தை போக்குமா ஆஞ்சநேயர் வழிபாடு !!

Anjaneyar
திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியத்தை அள்ளித்தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். அல்லது வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவ படத்தை வைத்தும் வழிபடலாம்.


சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
ஆஞ்சநேயர் வழிபாடு :

கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றுவார்.

ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.

அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம். அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

Edited by Sasikala