ஆடி மாதத்தில் என்னவெல்லாம் சிறப்புகள் உள்ளது தெரியுமா...?
ஆடி மாதத்தில் தான் அம்மன் அவதரித்தாள். அதோடு ஆடி மாதம் மழைக் காலத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது.
ஆடி செவ்வாயில் முருகனையும், அம்பாளையும் தீபம் ஏற்றி மனமுருகி வேண்டினால் வீட்டில் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்.
ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித்தரும். திருமண பாக்கியம் கைகூடிவரும்.
ஆடி செவ்வாய்க்கிழமையில் கன்னிப் பெண்கள் ஒளவையார் நோன்பிருந்தால் அவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.