1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (11:31 IST)

காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. புதுமணத்தம்பதிகள் குவிந்தனர்..!

காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் நடந்த நிலையில் புதுமணத்தம்பதிகள்  இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். 
 
ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டாம் தேதி ஆடிப்பெருக்கு காவிரி கரையோரங்களில் கொண்டாடுவது வழக்கம். இந்த கொண்டாட்டத்தின் போது புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றங்கரங்களில் வந்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. 
 
இந்த நிலையில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலை முதல் காவேரி கரையோரங்களில் உள்ள நகரங்களில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
திருச்சி, தஞ்சை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரிக்கரை படித்துறையில் திரண்டனர் என்பதும்  ஆடிப்பெருக்கின் போது காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran