புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (08:38 IST)

ஆடி வெள்ளிக்கிழமையில் குல தெய்வ வழிபாட்டு பலன்கள் !!

ஆடி வெள்ளி குலதெய்வத்திற்கு மிகவும் ஏற்றது. ஆடி வெள்ளி அன்று நாம் வழிபாடு செய்யும் தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமென்றால், அதற்கு குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். உங்கள் வீட்டில் செல்வம் தேடி வரும்.


குலதெய்வ வழிபாடு என்பது நம்முடைய குலத்தை காக்கக் கூடியது. குலதெய்வம் வேறு ஊரில் இருந்தாலும் கவலை வேண்டாம். நம்முடைய வீட்டிலேயே குல தெய்வத்தை வணங்கலாம். குலதெய்வத்தின் புகைப்படம் இருப்பவர்கள், புகைப்படத்திற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து தங்களுக்கு பிடித்த மலர்களின் மாலையை சாற்றலாம். புகைப்படம் இல்லாதவர்கள், தனியே ஒரு அகல் விளக்கை ஏற்றி வழிபடலாம்.

உங்கள் குல தெய்வத்திற்கு சர்க்கரை பொங்கலை படைப்பது மிக மிக விசேஷமானது. சர்க்கரை பொங்கல், வெற்றிலைப் பாக்கு ஆகிய இரண்டு மட்டுமே கூட போதுமானது.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்துக்கு முன்பே பூஜையை முடிப்பது சிறந்தது. குலதெய்வத்துக்கான சுலோகம் தெரியாதவர்கள் பொதுவான அம்மன் பாடல்களை ஒலிக்கச் செய்யலாம். கற்பூரம், ஊதுபத்தி காண்பித்து சாம்பிராணி போட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒரு ரூபாயை மஞ்சள் துண்டில் காணிக்கையாக முடிந்து வைத்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், குல தெய்வ கோவிலுக்கு போகும் போது அதை மறக்காமல் கொண்டு போய் உண்டியலில் செலுத்த வேண்டும்.

ஆடி வெள்ளிக்கிழமை குல தெய்வத்தை மறக்காமல் வழிபட்டால் அனைத்து வளங்களும் சேரும். தொழில் மேன்மை அடையும் திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியமும், குடும்பம் முன்னேற்றமும் அடையும்.