வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (18:52 IST)

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான்.. அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்..!

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பு மாதம் என்பதால் அந்த மாதத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் அம்மன் வீற்றிருகும் பல கோயில்களில் வித விதமான வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷம் பக்தியுடன் எழுப்பப்பட்டு வருகிறது என்பதும் சக்தி வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது என்பதால் ஆதி காலத்தில் இருந்தே தாய்மையை போற்றும் இந்த அம்மன் வழிபாடு நடைபெற்று வருகிறது என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர்.
 
கடவுளாகவும் அன்னையாகவும் குருவாகவும் அம்மனை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பார் என்றும் அம்மனுக்கு நன்றி சொல்லும் மாதமாகவே ஆடி மாதம் கருதப்படுகிறது.
 
ஆடி மாதம் முழுவதும் அம்மனின் மலர் பாதங்களில் நமது எண்ணமான அனைத்தையும் குவித்து வைத்தால், அம்மனிடம் முழுமையாக சரண் அடைந்தால், உடல் பொருள் ஆன்மா அனைத்தையும் அம்மன் காலடியில் ஒப்படைத்தால், குடும்பத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்பட்டு வருகிறது.
 
எனவே மிகச் சிறந்த அஸ்திவாரமாக இருக்கும் அம்மனை ஆடி மாதம் முழுவதும் வழிபடுவோம் சகல நன்மைகளையும் பெறுவோம்.
 
Edited by Mahendran