வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 17 மே 2014 (14:43 IST)

காங்கிரஸ் கட்சியினரே எனது தோல்விக்கு காரணம் - நடிகை ரம்யா குற்றச்சாற்று

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நடிகை ரம்யா, நடந்து முடிந்த தேர்தலில் அதே தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த ரம்யா, காங்கிரஸ் கட்சியினரே உள்ளடி அரசியல் செய்து தன்னை தோற்க்கடித்து விட்டதாக அவர் குற்றம்சாற்றியுள்ளார்.
நடிகை ரம்யா, கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்குள் இவருக்கு எதிர்ப்பு கோஷ்டிகள் முளைத்தன.
 
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ரம்யாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் புட்டராஜுவிடம் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார். இதனால் ரம்யா அதிர்ச்சியடைந்த ரம்யா, காங்கிரஸ் கட்சியினரே தனக்கு எதிராக வேலை பார்த்து தோற்கடித்து விட்டனர் என்று குற்றம்சாற்றியுள்ளார்.
 
தேர்தல் தோல்வி காரணமாக மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். ஏற்கனவே இவர் நடித்த மூன்று கன்னட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.