1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2016-2017
Written By Suresh
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2016 (08:01 IST)

இன்று தாக்கல் செய்யப்படுகிறது ரயில்வே பட்ஜெட்: சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார்

இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல்

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று 2016-17 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.


 

 
இவர் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற பின், தாக்கல் செய்யும்  இரண்டாவது ரயில்வே பட்ஜெட் இதுவாகும்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த சுரேஷ் பிரபு “ரயில்வே பட்ஜெட், நாட்டு நலனையும், ரயில்வே துறையின் நலனையும் கருத்தில் கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். பட்ஜெட்டை இறுதி செய்வதற்கு  அடிப்படை உண்மை நிலவரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டோம்
 
கட்டண  உயர்வு இல்லாமல், விளம்பரங்கள், வணிகமயமாக்குதல், உபரி நிலம் ஆகியவை மூலம் ரயில்வே துறையின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.
 
இந்நிலையில், பரபரப்பான சூழலில் இன்று முற்பகல் 11 மணியளவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
 
இந்த பட்ஜெட்டின் விவரங்களை வெப்துனியா உடனுக்குடன் வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.