1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2016-2017
Written By Bala
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2016 (11:00 IST)

முன் பதிவில்லா டிக்கெட் பயணிகளுக்கு கடிவாளம் போட்ட ரயில்வே

ரயிலில் சாதாரண வகுப்பில் (முன் பதிவு இல்லாத டிக்கெட்டில்) பயணம் செய்கிறவர்களுக்கு இதுவரை எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. தற்போது ரயில்வே துறை அதற்கும் முற்றுப்புள்ளை வைத்துள்ளது.


 

அதன்படி,  199 கி.மீ. வரையிலான இடங்களுக்கு ரெயிலில் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வாங்கி பயணம் செய்கிறவர்களுக்கு புதிய விதிமுறையை ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது.

எந்த இடத்தில் இருந்து பயணத்தை தொடங்க வேண்டுமோ அந்த இடத்தில் இருந்து டிக்கெட் வாங்கிய 3 மணி நேரத்தில் பயணத்தை தொடங்கி விட வேண்டும் அல்லது நீங்கள் போக வேண்டிய இடத்துக்கான முதல் ரெயிலில் பயணத்தை தொடங்கி விட வேண்டும். இவ்விரண்டில் எது தாமதமாக நேருகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 199 கி.மீ., தொலைவிலான இடத்துக்கு சென்று விட்டு, அங்கிருந்து திரும்பி வருவதற்கு முன்கூட்டியே டிக்கெட் பெறும் முறை வாபஸ் ஆகிறது. இந்த புதிய விதிமுறைகள் மார்ச் 1ம்  தேதி அமலுக்கு வருகிறது.