ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : வியாழன், 17 நவம்பர் 2022 (18:49 IST)

ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருப்பவர்கள் என்னென்ன செய்யக்கூடாது?

Ayyappan
இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளதை அடுத்து ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும் பக்தர்கள் இன்று முதல் மாலை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று பல கோவில்களில் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும் பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்
 
ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுபவர்கள் 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் எந்த காரணத்தை முன்னிட்டும் விரதத்தை கைவிடக்கூடாது. 
 
விரத காலங்களில் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைக்கக்கூடாது. 
 
காலை மாலை என இரண்டு வேளை கண்டிப்பாக குளிக்க வேண்டும், மாலை போட்டவர்கள் ஒரு வேளை மட்டும் குளித்து விட்டு இன்னொரு வேலை குளிக்காமல் இருக்கக் கூடாது 
 
விரத காலத்தில் முடி வெட்டுதல் மற்றும் முகச் சவரம் செய்தல் கூடாது. காலணி குடை ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 
 
மது அருந்துதல் மாமிசம் உண்ணுதல் கோபம் கொள்ளுதல் ஆகியவை விரதகாலத்தில் இருக்கக் கூடாது 
 
மாலை போட்டவர்கள் மற்றவரிடம் பேசும்போது சுவாமி சரணம் என்று ஆரம்பிக்க வேண்டும் .அதேபோல் பேச்சை முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்று கூற வேண்டும் 
 
மாலையை எந்த காரணத்தை முன்னிட்டும் கழட்டக்கூடாது. ஆனால் நெருங்கிய உறவினர் இறப்பு நேர்ந்தால் மாலையை கழட்டி விட்டு விரதத்தை ரத்து செய்துவிடலாம் 
 
விரதகாலத்தில் பகலில் தூங்கக்கூடாது, இரவில் தூங்கும் போது பாய் தலையணை போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது
 
Edited by Siva