வியாழன், 13 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2025 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் நாள் இன்று! - இன்றைய ராசி பலன்கள் (13.02.2025)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று புதிய வீடு கட்டும் முயற்சி நிறைவேறும். இந்த ராசிக் குழந்தைகளின் பெற்றோர் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் லாபம் பெருகும். விவசாயிகளுக்கு புத்துணர்வான காலமாகும். அரசியல்வாதிகளும் அதிக தொண்டர்களை அடைவர். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்:
இன்று திட்டமிட்டபடி எல்லா செயல்களும் நிறைவேறும். ஆனால், செயல்களை நிதானமாக செய்யுங்கள். ரியல் எஸ்டேட் துறையினர் ஒப்பந்தங்களை முடித்து விடுவது நல்லது. கடும் முயற்சிகளின் பேரில் வேலை கிடைக்கும். அரசு வழி உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத பதவிகள், வாகன வசதிகளுடன் கிடைக்கப் பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்: 
இன்று பூர்வீகச் சொத்துப் பிரச்னையை முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்வார்க்ள். அவர்கள் விரும்பிய கல்வியிலேயே சேர்ப்பது நல்லது. சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:
இன்று பொருளாதார சுபிட்சம் பெருகும். அந்தஸ்து உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆரோக்ய அற்புதமாக இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் அன்றாட வாழ்வில் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்:
இன்று உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை, உங்கள் மேல் அதிகாரி ஒப்படைப்பார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். பெரிய  நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும். புகழ் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி:
இன்று நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள். மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும். சமுதாய நலப்பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

துலாம்:
இன்று பொருளாதார சுபிட்சம் பெருகும். அந்தஸ்து உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆரோக்ய அற்புதமாக இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் அன்றாட வாழ்வில் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்:
இன்று உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், "மரியாதைக்குரிய தொலைவில்' இருந்து பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு:
இன்று வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கல்லூரி, இன்ஷ்யூரன்ஸ் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். இடமாற்றம் கிடைக்கும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது எதிரிகளை நீங்கள் ஜெயிப்பதற்கு நேரத்தை சரியான வழியில் செலவிடவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்:
இன்று உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். யாரையும் நம்பி ப்ளாங் செக் கொடுத்தல் கூடாது. உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:
இன்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உறவினர்கள் சிலர் உங்களுக்குள் வீண் வம்புச் சண்டையை ஏற்படுத்தக் கூடும். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மீனம்:
இன்று மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்ப சிதைவு வரக்கூடும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என சுபச் செலவுகள் அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் முழுமையடையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5