புதன், 12 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2025 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்! - இன்றைய ராசி பலன்கள் (12.02.2025)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று எதிர்பார்த்த பணவரவுகள் குறித்த காலத்தில் கிடைக்கப் பெறாது. பெற்றோர் சம்மதிக்காத திருமணங்களை இந்த காலத்தில் தள்ளிப் போடுவது நல்லது. அரசியல்வாதிகள் தங்கள் நிலையை கருத்தில் கொள்வதோடு மனைவியின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். வங்கிக் கடன்கள் தள்ளிப்போகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

ரிஷபம்:
இன்று மிகுந்த கவனம் தேவை. கூட்டுத் தொழில் புரிவோர் கணக்கு வழக்குகளை பரஸ்பரம் சரிபார்த்து நேர் செய்து கொள்ளுங்கள். இந்தத் தேதிக்கு பிறகு லாபங்கள் இரட்டிப்பாகும். புதிய செயல்களால் லாபம் இப்போதைக்கு இல்லை என்றாலும் வருங்காலத்துக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மிதுனம்: 
இன்று சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். எந்த ஒரு காரியத்திலும் குழப்பங்கள் அகன்று தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கடகம்:
இன்று அரசாங்க காரியங்களில் அனுகூலம் ஏற்படும். கற்றறிந்தோர் கௌரவம் ஏற்படும். புகழ் கிடைக்கும் நற்காரியங்களை இந்த நேரத்தில் ஆற்ற இயலும். தம்பதிகளிடத்தில் அன்னியோன்னியம் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும் சில வீண் செலவுகளும் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

சிம்மம்:
இன்று அக்கம்-பக்க வீட்டாரிடம் உங்கள் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.  போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். ஏற்றுமதி-இறக்குமதியால் அதிக லாபம் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி:
இன்று உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். செயலில் வேகம் பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள் ரசாயனத் துறைகளில் உள்ளவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

துலாம்:
இன்று வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவி  கிடைக்கலாம். வியாபாரத்தை விருத்தி செய்வதற்குண்டான காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம்.
.அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9   

விருச்சிகம்:
இன்று சென்ற இடத்திலெல்லாம் பிரச்சினையை சந்தித்தவர்கள் கூட விரும்பி வரவேற்கப்படுவார்கள். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். "என்ன நடக்குமோ?' என்று பயந்த விஷயங்கள்கூட மகிழ்ச்சிகரமாக முடிவடையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு:
இன்று எந்த நேரத்திலும் பதட்டம் அடையவே கூடாது. மனைவி வகை உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமையால் வியாபாரம் செழிப்படையும். பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

மகரம்:
இன்று சிக்கனமாக செலவழிக்கவும். வியாபாரிகளுக்கு, உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். மீன்கள் சம்பந்தப்பட்ட உணவிற்கு கிராக்கி வரும் என்பதால் அது சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலம் இது. உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்:
இன்று பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் விரும்பிய கல்வியிலேயே சேர்ப்பது நல்லது. சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். பழைய சிக்கல்கள் யாவும் தீரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புது முயற்சிகள் பலிதமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மீனம்:
இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்கள் உதவுவார்கள். சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்த வண்ணம் இருக்கும். சேமிப்புகள் கரையும். சிலரால் நீங்கள் ஏமாற்றப்படக் கூடும். எனவே பண விஷயத்தில் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9