செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (11.02.2025)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று சற்று நிதானமாக செயல்பட வேண்டிய நாள் இது. எவரைப் பற்றியும் எதிர்மறை கருத்துக்களை வெளியிடாதீர்கள். குடும்பத்தில் பிரிவு ஏற்படலாம். தற்செயலான விபத்துக்களை சந்திக்க நேரும். உணவு விஷயத்தில் கடும் எச்சரிக்கை தேவை. இரவு, அதிகாலை நேரங்களில் பிரயாணங்களை தவிர்க்க வேண்டும். சாலைவழி உணவிடங்களில், நேரம் தாண்டி இரவு உணவு உட்கொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்:
இன்று அனைத்து செயல்களையும் கவனமாக நடத்தி வரவேண்டும். எல்லாமே மெதுவாகத்தான் நடக்கும். பிரச்னைகள் வந்த வண்ணம்தான் இருக்கும். உள்ளதை உள்ளபடி நகர்த்தி வந்தால் போதும். உத்யோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் இடையூறு அதிகரிக்கும். ஆச்சரியமான ஒரு கலகத்தால் அரசியல்வாதிகள் மானப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ள நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்: 
இன்று மனவருத்தங்கள் நீங்கும். பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:
இன்று மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அதனால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு உத்தமமான லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சிக் குறை ஏற்படாது. அன்றாட பிரச்சனைகளில் எந்தத் தொந்தரவும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்:
இன்று தந்தையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.  தாயின் உடல்நிலை சீராகும். குலதெய்வக் கோயிலை எடுத்துக் கட்டுவீர்கள். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால்  ஆதாயம் உண்டு. சிறு விபத்துகள் வரக்கூடும். இயக்கம், சங்கம், டிரஸ்ட் இவற்றிலெல்லாம் கௌரவப் பதவிகள் தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி:
இன்று உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. பாதுகாப்பு அவசியம். உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். ஒற்றுமை பலப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

துலாம்:
இன்று போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றத்திற்கு  இருந்த  முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்:
இன்று குறைந்த அளவு முதலீட்டிலும் அதிக லாபத்தை அள்ளுவீர்கள். எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

தனுசு:
இன்று பத்திரிகைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு நல்ல ஏற்றம் இருக்கும். வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிறப்பான பலனையும், பணவரவையும் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். அதனால் கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்:
இன்று தடைபட்டிருந்த கல்வியைத் தொடர்வதற்கு ஏற்ற காலமிது. கலைஞர்களுக்கு, விளம்பரத்துறை, திரைத்துறை டெக்னிக்கல் மற்றும் சின்னத்திறை சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். ஆனாலும் இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்:
இன்று கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுவது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. மாடிப்படிகளில் ஏறும் போது கவனமாக இருங்கள். வரம்பு மீறி யாரையும் விமர்சிக்க வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சலும் செலவுகளும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6.

மீனம்:
இன்று விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றியுண்டு. தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். நெருக்கமானவர்களுடன் மோதல், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். எதிர்பார்த்திருந்த வகையில் உதவியுண்டு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6