புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (06:10 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் மகிழ்ச்சி பெருகும்!– இன்றைய ராசி பலன்கள்(26.08.2024)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 


மேஷம்:
இன்று உற்றார்-உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். மனசஞ்சலங்கள் அதிகரிப்பதால் அமைதிக்குறைவு உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமங்களையே சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 
ரிஷபம்:
இன்று  கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றால் பெரிய சிக்கல்களையும், வம்பு வழக்குகளையும் சந்திப்பீர்கள். கொடுத்த கடன்களை வசூலிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும். அரசியலில் மறைமுக எதிரிகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

 
மிதுனம்:
இன்று  நிதானம் தேவை. கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் காப்பாற்றிக்கொள்வது உத்தமம். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கடன்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

 
கடகம்:
இன்று உங்களுக்கு எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணவிவகாரங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

 
சிம்மம்:
இன்று உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். மனைவிக்கு வயிற்றுவலி, மாதவிடாய் தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் நிலவுவதால் மனநிம்மதி குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கன்னி:
இன்று தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சரியான நேரத்திற்கு உணவுண்ண முடியாத நிலை, உடல் சோர்வு, தூக்கமின்மை போன்றவற்றாலும் பாதிக்கப்பட நேரிடும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

 
துலாம்:
இன்று கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதார நிலையில் ஓரளவுக்கு பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண்செலவுகளால் கடன்வாங்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

 
விருச்சிகம்:
இன்று திருமண சுபகாரிய முயற்சிகளுக்கு நெருங்கியவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு வீடு பழுதடைவதால் வீண்விரயங்களும் உண்டாகும். புத்திரர்களால் மனசஞ்சலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதிக் குறையும். சேமிக்க முடியாமல் போகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

 
தனுசு:
இன்று கொடுக்கல்- வாங்கல் கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியாமல் போகும். கொடுக்கல்-வாங்கலில் வீண் விரயமும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத சூழ்நிலைகளும் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

 
மகரம்:
இன்று பெரிய முதலீடுகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. சிலருக்குக் கொடுத்த பணத்தைத் திரும்பப்பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

 
கும்பம்:
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளையும் சந்திக்க நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தள்ளிவைப்பது நல்லது. எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

 
மீனம்:
இன்று சிலருக்கு பொருட்தேக்கமும் உண்டாகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கைநழுவிப்போகும். தொழிலாளர்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்வதில் தடைகள் ஏற்பட்டு அவர்களாலும் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9