செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (06:01 IST)

இந்த ராசிக்காரர்கள் அனுசரித்து செல்வது நல்லது! – இன்றைய ராசி பலன்கள்(29.12.2023)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்
இன்று கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் ஓரளவுக்கு லாபம் அடையமுடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பைப் பெறமுடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டிகள் மறைந்து தேக்கமான நிலைகள் விலகும். சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்
இன்று ஓரளவுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்
இன்று புதிய வேலை தேடுபவர்களுக்குக் கிடைக்கும் வேலைகள் தொலை தூரத்தில் கிடைப்பதால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

சிம்மம்
இன்று கணவரின் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உற்சாகம் மறையும். முயற்சிகளில் தடைகளைச் சந்திப்பீர்கள். பொருளாதார நிலையிலும் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

கன்னி
இன்று வரவுக்குமீறிய செலவுகளால் கடன்கள் தோன்றும். உற்றார்-உறவினர்களாலும் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். திருமண சுபகாரிய முயற்சிகளை சிறிது தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் பொருள்தேக்கம் உண்டாகாது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்
இன்று அரசுவழியில் வீணான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் மிகவும் அனுசரித்துச்செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

விருச்சிகம்
இன்று எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.  மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

தனுசு
இன்று உங்களுக்கு  செல்வம், செல்வாக்கு உயரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

மகரம்
இன்று சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

கும்பம்
இன்று மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் பலமும், வலிமையும் கூடும். புத்திரவழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

மீனம்
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3,