வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (06:00 IST)

உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (16-12-2023)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்
இன்று கொடுக்கல்-வாங்கலில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வீண்கஷ்டங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைப்படும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பெற்றோர் வழியில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்
இன்று வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளையும், போட்டிகளையும் சமாளித்து எதிர்நீச்சல் போட்டே முன்னேற்றத்தை அடையமுடியும்
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்
இன்று தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனை உண்டாக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க தேவையான உத்வேகம் கிட்டும். தைரியமாக இருக்க இறைவனை வேண்டுங்கள். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்
இன்று எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் பலவழிகளில் வந்து உங்களின் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள் சேரும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலமாக அமையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .சிறப்பான  நாள் . புத்திரபாக்கியம் உண்டாகி மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உற்றார்-உறவினர்களும் சாதகமாக அமைவார்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கக்கூடிய காலமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி
இன்று புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் போன்ற யாவும் வாங்கக்கூடிய யோகம் அமையும். சேமிப்பு பெருகும்.  பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். மனத்திருப்தியுடன் காரியங்களை  செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்
இன்று குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளைப்பெற்று மகிழ்ச்சியடைவார்கள். புதிய வேலை தேடுபவர்களும் சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்
இன்று டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். விரும்பியபடி காரியங்கள் நடக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உங்களுடைய புகழ், பெருமை யாவும் உயரும். உடல்நலம் அற்புதமாக அமையும். மனைவி, பிள்ளைகளும் மகிழ்ச்சியுடனேயே இருப்பார்கள். எந்தவித மருத்துவச் செலவுகளும் இல்லாது  இருக்கும். கவலை வேண்டியதில்லை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி  இருக்கும். பொருளாதாரநிலையும் சிறப்பாக அமைவதால் எல்லாத்தேவைகளும் பூர்த்தியாகி கடன்கள் அனைத்தும் பைசலாகும். சிலருக்கு புதுவீடு கட்டி குடிபுகக்கூடிய எண்ணம் மேலோங்கும் . சிலருக்குப் பெரிய தொகை சேமிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்
இன்று புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றியினைப் பெறமுடியும். கொடுக்கல்-வாங்கலிலும் சரளமானநிலை இருக்கும்.தொழில், வியாபாரம் நல்ல லாபத்தை உண்டாக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். அரசியல்வாதிகளுக்கு மாண்புமிகு பதவிகள் கிடைக்கப்பெறும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

மீனம்
இன்று கடன்கள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  எல்லாவகையிலும் ஓரளவுக்கு ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5