வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (06:00 IST)

உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (07-12-2023)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும் என்றாலும் வேலைப்பளுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும். எந்தப் பணி முடிப்பதற்கும் கடின உழைப்புக்களை மேற்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஓரளவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

ரிஷபம்:
இன்று உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைவதில் தடைகள் உண்டாகும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் உண்டாகாது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் மனசஞ்சலம் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்:
இன்று எண்ணியதை எப்பாடுபட்டாவது செயல்படுத்த வேண்டும் என்று செயல்படுவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக அமையும் என்றாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் அனைத்திலும் தடைகளே நிலவும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்:
இன்று கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எதிலும் சற்றுச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:  4, 6

சிம்மம்:
இன்று அரசியல்வாதிகள் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடுபட வேண்டிவரும். வயல்வேலைகளுக்குத் தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள். சந்தையிலும் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்:  3, 5

கன்னி:
இன்று வீண்பகை உண்டாகலாம். எனவே  கவனமாக செயல்படுவது நல்லது. விளைச்சல் ஓரளவுக்குதான் இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்துச் செல்லவும். புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்:  2, 6

துலாம்:
இன்று பொருளாதார பாதிப்புக்கு ஆளாவீர்கள். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும். அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும். மாணவர்கள் கல்வியில் முழுமூச்சுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

விருச்சிகம்:
இன்று நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. விளையாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றாலும் ஓரளவுக்கு முன்னேற்றங்களை அடைய முடியும். அரசுவழியில் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

தனுசு:
இன்று பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக அமையும்.  முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பண விஷயங்களில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. மாணவர்கள்  கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்:
இன்று கணவன்-மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாது. நெருங்கியவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்ற நினைப்பைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமடையும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்:
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களும் நிறைய போட்டிகளை சந்திக்கநேரிடும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும்.  பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

மீனம்:
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனை அடையமுடியும். தேவையற்ற வீண் பேச்சுக்களை  குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்றே கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.
அதிர்ஷ்டநிறம்:  மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6