புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (08:54 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப கஷ்டங்கள் தீரும்! – இன்றைய ராசி பலன்கள்(30-11-2023)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்:
இன்று புதியதாக வாகனங்கள் ஏதேனும் வாங்கும் எண்ணமிருந்தால் நன்கு ஆராய்ந்தும், ஆலோசனைகள் செய்தும் வாங்குவது நல்லது. மின்னணு மற்றும் மருத்துவ சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் நல்ல லாபம் பெறலாம். முதலீடு இல்லாத புதிய தொழில் தொடங்குவதற்கும் உங்களுக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

ரிஷபம்:
இன்று குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்:
இன்று திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

கடகம்:
இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்:
இன்று கலைஞர்கள், விளம்பரம், ஒப்பனை, ஒலி, ஒளி சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் எடிட்டிங்  போன்ற துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி:
இன்று உங்கள் பொருட்கள் திருடு போகலாம். கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். புகழும், விருதுகளும் கிடைக்கும். எழுத்து பணியில் இருப்பவர்கள் சளைக்காமல் பணியைச் செய்யவும். சூட்டிங் விஷயமாக அலைச்சலும், அதன்மூலம் மனமும் உடலும் சோர்வடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்:
இன்று கலைஞர்கள், விளம்பரம், ஒப்பனை, ஒலி, ஒளி சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் எடிட்டிங்  போன்ற துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்:
இன்று கலைஞர்கள், விளம்பரம், ஒப்பனை, ஒலி, ஒளி சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் எடிட்டிங்  போன்ற துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு:
இன்று உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நனமை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்:
இன்று குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். கடன் கொடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொடுக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்:
இன்று உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3