வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (06:00 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்! இன்றைய ராசிபலன் (23-05-2023)!

daily astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 

மேஷம்:
இன்று தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

ரிஷபம்
இன்று குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம். இரண்டாம் வீடு பத்தாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடாக அமைவதால் நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த நாள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்
இன்று அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும். பிள்ளைகளின் மேல் மிக எச்சரிக்கையாக இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

கடகம்
இன்று தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள், கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு பொருளும் புகழும் கூடும். அரசியலில் தொல்லைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

சிம்மம்
இன்று உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

கன்னி
இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும். பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5

துலாம்
இன்று தந்தையின் ஆதரவு உண்டு. வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்
இன்று விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.   பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5

தனுசு
இன்று பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. கலைத்துறையினருக்கு மிக சிறந்த காலகட்டமிது. வாய்ப்புகள் தேடி வரும். அரசியலில் குறுக்கு வழிகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பான தேர்ச்சியினைக் காண்பார்கள்.  சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மகரம்
இன்று புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்
இன்று புத்தி சாதுர்யத்தால் புகழையும், செல்வத்தையும் பெறுவீர்கள். எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம்  செல்ல வேண்டி இருக்கும்.  சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மீனம்
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம்  வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.  வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 9, 3