1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (10-09-2021)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 
மேஷம்
இன்று எதிர்பாராத பயணங்களால் அனுகூலம் ஏற்பட்டு மனநிம்மதி உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடைபடும். தொழிலில் போட்டிகள் அதிகரித்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பிற கலைஞர்கள் தட்டிச் செல்வார்கள். வரவேண்டிய பணத்தொகையும் தாமதப்படும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
 
ரிஷபம் 
இன்று புதிய வாய்ப்புகள் தடைப்படுவதால் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக்கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். மாணவ- மாணவிகள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசம் உங்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
 
மிதுனம் 
இன்று எதிர்பார்க்கும் அரசு உதவிகள்  கிடைப்பதில் தாமதம் ஏற்படும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. நெருங்கியவர்களிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சில இடர்ப்பாடுகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றியினைப் பெறுவீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
 
கடகம் 
இன்று பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். வீணான செலவுகளைக் குறைத்துக்கொள்வதன் மூலம் கடன்களைத் தவிர்க்கலாம். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் பெரிய தொகை ஈடுபடுத்துவதையும் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
 
சிம்மம் 
இன்று தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் அதற்கேற்ற அனுகூலமான பலன்களும் உண்டாகும். கிடைக்க வேண்டிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதற்கேற்ற அபிவிருத்தியை உங்களால் செய்யமுடியாமல்போகும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
 
கன்னி 
இன்று தெய்வ காரியங்களுக்காக சில செலவுகளைச் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் மதிப்பு, மரியாதை உயரும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திருப்தியான நிலையை அடைவீர்கள். அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
 
துலாம் 
இன்று உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார நிலையில் தடைகள், எதிர்பார்க்கும் உதவிகளில் தாமத நிலை உண்டாகக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புக்கள், தேவையற்ற பிரச்சினைகள், வீண்வாக்கு வாதங்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
 
விருச்சிகம் 
இன்று மனநிம்மதி குறையும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். வரவேண்டிய ஆர்டர்கள் குறையும். லாபம் தடைப்படும். கூட்டாளிகளும் ஒற்றுமையாக செயல்பட மட்டார்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
 
தனுசு 
இன்று பணம் கொடுக்கல்-வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்கமுடியாது. தேவையற்ற வம்பு வழக்குகளும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தைவிட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
 
மகரம் 
இன்று பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக அமையும். உடல்நலனிலும் கவனம் செலுத்த வேண்டி வரும். குடும்பத்தில் குழப்பமும், பிரச்சினைகளும் உண்டாகும். நீங்கள் பிறருக்கு நல்லதாக நினைத்துச் செய்யக்கூடிய காரியங்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
 
கும்பம் 
இன்று மருத்துவச் செலவுகளால் மனநிம்மதி குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களும், கிடைக்கும் ஆர்டர்களைத் தக்கசமயத்தில் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் பொருள்தேக்கத்தைத் தவிர்க்கமுடியும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 
மீனம் 
இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நன்மையளிக்கும். அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9