வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (20-02-2019)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் நண்பர்கள் உங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் உங்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடும். திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய வேண்டி இருக்கலாம். பணவரத்து கூடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

ரிஷபம்:
இன்று தொழில் வியாபாரத்தில் நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது.  மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்:
இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வரும் லாபம் தடைபடாது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்திற்கு தடைதாமதம் வந்தாலும் அவை வந்து சேரும். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடி விரிவாக்கம் செய்வது சிரமமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்:
இன்று அதிக உழைப்பும், குறைந்த வருவாயும் கிடைக்கும். நல்லது கெட்டுத நிர்ணயிப்பதில் தடுமாற்றம் உண்டாகும். சிலருக்கு குடும்பத்தை விட்டு உத்தியோக நிமித்தமாக வெளியில் சென்று தங்க நேரிடும். வீண்விவகாரங்களில் தலையிடாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.  அடிக்கடி கோபமாக பேசநேரிடும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

சிம்மம்:
இன்று சில காரியங்கள் சரிவர முடியாமல் போக பேச்சே ஒரு காரணமாகிவிடக்கூடும். அன்னியர் மூலம் செலவும் உண்டாகும். சொத்துகள் வாங்குவதில் வில்லங்கம் ஏற்படலாம். மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.  மனைவியின் உடல்நிலையில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாலினரோடு மிகவும் கவனமாக பழகுவது நல்லது, சுறுசுறுப்பு குறைந்து சோர்வு உண்டாகலாம். எனவே வீண்அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி:
இன்று வயிறு தொடர்பான நோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.  பணபற்றாக்குறை ஏற்படலாம். சேமித்து வைப்பது  நல்லது. மாணவர்கள்  மிகவும் கவனமாக படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது. கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

துலாம்:
இன்று வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தங்க நகை சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்:
இன்று எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரத்து குறையலாம். வாகனம், வீடு மூலம் செலவுகளும் அவ்வப்போது ஏற்படலாம். எதையும் செய்யும் முன் தயக்கம் உண்டாகலாம். வீண் அலைச்சல், காரியதாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

தனுசு:
இன்று சிலருக்கு இடமாற்றம்  உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. சரக்குகளை அனுப்பும் போதும் சேமித்து வைக்கும் போதும் கவனமாக இருப்பது நன்மை தரும். பிள்ளைகள் உடல்நிலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் சற்று விழிப்புடன்  இருப்பது நல்லது. நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:
இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும்.  அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எழுத்து துறையில் இருப்பவர்கள் திறமை வெளிப்படும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கும்பம்:
இன்று திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். மனதில் அவ்வப்போது ஏதாவது கவலை ஏற்படும். வீண் அலைச்சல் ,வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமை என்று  ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வந்து மனசோர்வை உண்டாக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:
இன்று குடும்பத்தில் குழப்பம், பணதட்டுப்பாடு  போன்றவை ஏற்படலாம். எனவே எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் பல ஆறுதலான விஷயங்கள் நடக்கும். எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் இருக்காது. தொழில் போட்டி இருக்காது.  எதுவும் லாபமாக நடக்கும். மனதுக்கு பிடித்தபடி ருசியான சாப்பாடு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5