1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By

வாஸ்துப்படி மனையின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் தெரியுமா....?

வீட்டில் தினந்தோறும் சூரியோதயம் மற்றும் சூரியன் மறைவு நேரத்தில் செய்யப்படும். அக்னி ஹோத்திரம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வு அமையவும் உதவும். வீட்டில் நாமே செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம்.
முறையான கணக்குகளுடன் செய்யப்பட்ட பிரமிடுகளை வீட்டில் உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம். மேலும், மன உலைச்சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி நிம்மதியாக நம்மை வாழவும் வைக்கின்றது.
 
ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால் பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும்.  அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும். வாயு மூலை  மேடாகவும், அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும். 
 
கன்னி மூலை உயரமாகவும், ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்க செல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.
 
கிழக்கு, அக்னி மூலை ஆகியவை உயரமாகவும், வாயு மூலையும் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், துயரத்திலும், சிக்கலிலும் ஆழ்த்தி  விடும்.
 
அக்னி மூலையும், தெற்கும் உயரமாகவும், வாயுமூலையும், வடக்கும் பள்ளமாகவும் இருந்தால் பல வகை இலாபங்கள் ஏற்படும்.
 
தெற்கும், தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளமாகவும் ஆனால் அவ்வீட்டில் இருப்பவரை லட்சாதிபதியாக்கி விடும். நீண்ட ஆயுள், சந்தானம் விருத்தி ஏற்படும்.
 
தென்மேற்கும் (கன்னி) மேற்கும், உயரமாகவும் இருந்தால் பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.
 
வாயுமூலையும், மேற்கும் உயர்ந்து, அக்னி மூலையும் கிழக்கும் தாழ்ந்து இருந்தாலும், பகைவரையும் துயரத்தையும் ஏற்படுத்தும். தீ  அபாயங்களை ஏற்படுத்தும்.
 
வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும், அக்னி மூலையும், பள்ளமாகவும் இருந்தால் நோய்கள் வாட்டும். நீண்ட கால வியாதிகள்  தோன்றும்.