ராஜபக்சேவின் மகன் இலங்கை கடற்படையில் இருந்து சஸ்பெண்டு
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜபக்சேவின் மகன் யோஷிதா இலங்கை கடற்படையில் இருந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜபக்சேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்சே இலங்கை கடற்படையில் லெப்டினென்ட் கர்னல் ஆக பணிபுரிகிறார்.
இந்நிலையில், ராஜபக்சே இலங்கை அதிபராக இருந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவரது குடும்பத்தினர் பல்வேறு ஊழல் புகாரில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, ராஜபக்சேவின் மனைவி, மகன்கள் மற்றும் தம்பிகள் மீது நீதி விசாரணை பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
அத்துடன், ராஜகச்சேவின் இளைய மகன் யோஷிகா மற்றும் 3 பேர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் யோஷிதா கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை கடற்படை பணியில் இருந்து யோஷிதா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.