இலங்கை சிறையில் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்


K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 7 ஜூலை 2015 (04:40 IST)
இலங்கை சிறையியிருந்து தங்களை உடனே விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் காலவறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

 

கடந்த ஜூன் முதல் தேதி அன்று இலங்கை கடற்படையால் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இவர்கள் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் 14 பேருக்கும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, சிறையில் இருந்து தங்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, நேற்று காலை முதல் சிறைக்குள் மீனவர்கள் 14 பேரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிறை காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :